ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

79பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் ஆமூர் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள மந்தைவெளி புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டி, மரங்களை வெட்டி விற்பனை செய்ய முயன்றதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், கிராம நிர்வாக அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள், ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி