திண்டிவனம் அருகே பெண் சிசுவின் சடலம் மீட்பு

73பார்த்தது
திண்டிவனம் அருகே பெண் சிசுவின் சடலம் மீட்பு
திண்டிவனம் வட்டம், ஆவணிப்பூர் கிராமம், மந்தைவெளி ஓடைப்பாலம் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவின் சடலம் திங்கள்கிழமை கிடந்தது. தகவலறிந்த ஆவணிப்பூர் கிராம நிர்வாக அலுவலர் தே. பிரதீப், ஒலக்கூர் போலீசார் நிகழ்விடம் சென்று சிசுவின் சடலத்தை மீட்டுச் சென்றனர். மேலும், சிசுவின் சடலத்தை ஓடை அருகே போட்டுச் சென்ற தாய் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி