சப் இன்ஸ்பெக்டரிடம் 1. 5 லட்சம் மோசடி செய்த நபர் மீது வழக்கு

4பார்த்தது
சப் இன்ஸ்பெக்டரிடம் 1. 5 லட்சம் மோசடி செய்த நபர் மீது வழக்கு
திண்டிவனம் ஜக்காம்பேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் (61), கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் உள்ள ஒரு கடையை வாடகைக்கு எடுக்க அதன் உரிமையாளர் உமா சந்திர பிரகாஷிடம் ரூ. 1.5 லட்சம் முன் பணமாக வழங்கியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட உரிமையாளர் கடையை வாடகைக்கு விடாமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் ஏமாற்றியுள்ளார். இது குறித்து விநாயகம் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீசார் உமா சந்திர பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி