திண்டிவனத்தில் நடைபெறவுள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வருகை தந்துள்ளார். திண்டிவனம் அருகே உள்ள செஞ்சி சாலையில் அவருக்கு வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். தனது வாகனத்திலிருந்து கீழே இறங்கிய முதலமைச்சர், சாலையில் காத்திருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து கைகுலுக்கினார். உற்சாகத்துடன் திரண்டு வந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் பெற்றுக்கொண்டார்.