திண்டிவனம் நகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தில், நகர மன்ற உறுப்பினர் பாபு தாமதமாக வந்ததால், புதிதாக நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கவுன்சிலர் சரவணன் அமர்ந்திருந்த இருக்கையை அவர் அவசரமாக வந்து பறித்துக்கொண்டார். திமுக சமூக நீதி பற்றி பேசி வரும் நிலையில், இந்த செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. பின்னர், நிலைமையை சமாளிக்க பாபு, மாற்றுத்திறனாளி கவுன்சிலருக்கு அருகில் வேறொரு நாற்காலியை ஏற்பாடு செய்தார்.