ஓட்டுநர்கள் திண்டிவனம் நகராட்சியை முற்றுகையிட்டதால் பரபரப்பு

0பார்த்தது
ஓட்டுநர்கள் திண்டிவனம் நகராட்சியை முற்றுகையிட்டதால் பரபரப்பு
திண்டிவனத்தில் 27.51 கோடி ரூபாய் செலவில் முதல்வர் திறந்து வைத்த புதிய பேருந்து நிலையத்தில், திறப்பு விழாவுக்கு அடுத்த நாள் ஆட்டோ ஓட்டுநர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் சூழல் உருவானது. இதையடுத்து, அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பாலச்சந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகராட்சி ஆணையர் பானுமதி மற்றும் நகரமன்றத் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி