திண்டிவனம்: விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு

716பார்த்தது
திண்டிவனம்: விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு
திண்டிவனத்தைச் சேர்ந்த பார்த்திபன் (59) சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மொபெட் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, லாரி மோதி பலத்த காயமடைந்த பார்த்திபன், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி