திண்டிவனம் அருகே பைக் கார் மோதல் முதியவர் பலி

0பார்த்தது
திண்டிவனம் அருகே பைக் கார் மோதல் முதியவர் பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தீவனூர் பகுதியில் கார் மற்றும் பைக் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ராஜேந்திரன் (75) சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்தில் பைக்கில் வந்த நடுவனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான ரஞ்சித்குமார் மற்றும் கோபிநாத் ஆகிய இருவர் காயமடைந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.