விழுப்புரம்: அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரி கண்டுபிடிப்பு; 3 பேர் மீது வழக்கு

734பார்த்தது
விழுப்புரம்: அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரி கண்டுபிடிப்பு; 3 பேர் மீது வழக்கு
விழுப்புரம் எஸ்.பி. சாய் பிரனீத் உத்தரவின் பேரில், திண்டிவனம் அருகே சோனலூரில் அனுமதியின்றி செயல்பட்ட பாலு என்பவரது கல்குவாரி பிரம்மதேசம் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக பாறைகளை உடைக்கப் பயன்படுத்தப்பட்ட 2 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக குவாரி உரிமையாளர் பாலு மற்றும் ஓட்டுநர்கள் செல்வம், தினகரன் ஆகிய 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி