திண்டிவனம் அம்மன் நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வேல்முருகன் (40) என்பவர், குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 1 கிராம் மோதிரம் திருடு போனது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு இந்தத் துணிகரத் திருட்டு நடந்துள்ளது. வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.