குண்டலப்புலியர் வீட்டுமனை பட்டா வேண்டி மக்கள் மனு

84பார்த்தது
குண்டலப்புலியர் வீட்டுமனை பட்டா வேண்டி மக்கள் மனு
விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூர் ஆதிதிராவிடர் பகுதி மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: குண்டலப்புலியூரில் வீடற்ற, நிலமற்ற ஏழை ஆதிதிராவிடர் சமூகத்தினர் சிலருக்கு, வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. அதில், கிராமப் பொதுப் பயன்பாட்டிற்காகவும், விளையாட்டுத் திடலுக்காகவும் விடப்பட்ட இடத்தை, கிராம நிர்வாகத்தினர் சிலர், வசதிப்படைத்தவர்களுக்கு, பொது இடத்தில் முறைகேடாக, மனைப்பட்டா வாங்கிக் கொடுத்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, முறைகேடாக வழங்கிய மனைப்பட்டாக்களை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி