திண்டிவனம் பெலாக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி வசந்தா (50). திண்டிவனம் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் தனியார் காலணி உற்பத்தி நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். வசந்தா செவ்வாய்க்கிழமை நிறுவனத்தில் பணியிலிருந்தபோது மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சக தொழிலாளர்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, வசந்தா ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.