விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இன்று மாலை மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் காளி மற்றும் அம்மன் வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர். மருத்துவர் ராமதாஸ் இல்லம் அருகே பாமகவினர் திடீரென சாலையிலேயே நடனமாடத் தொடங்கியதால் ஊர்வலம் தடைபட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் எச்சரித்தும் நடனம் நிற்காததால், கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. பொதுமக்கள் சிதறி ஓடியதால் திண்டிவனம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.