மாணவியிடம் பாலியல்சீண்டலில் ஈடுபட்ட காவலர் போக்சோவில் கைது.

2பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் கொந்தாமூரைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி மற்றும் 12ஆம் வகுப்பு மாணவன் காதல் வயப்பட்டு சென்னைக்கு சென்றனர். நள்ளிரவில் திரும்பியபோது பிரம்மதேசம் காவலர் இளங்கோ இருவரையும் பிடித்து விசாரித்துள்ளார். மாணவனை அனுப்பிவிட்டு, மாணவியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வழியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மாணவி பைக்கிலிருந்து குதித்து விடுவேன் என கூறியதால், காவலர் அவரை பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார். மாணவியின் பெற்றோரிடம் நடந்ததை அறிந்ததும், அவர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். திண்டிவனம் மகளிர் போலீசார் காவலர் இளங்கோவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி