திண்டிவனத்தில் சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

62பார்த்தது
திண்டிவனத்தில் சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
திண்டிவனம் காவேரிப்பாக்கம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றதற்கு பாராட்டு விழா நடந்தது. நகராட்சி மேல்நிலைப்பள்ளி 2024-25ம் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதிய 20 மாணவர்களும், பிளஸ் 2 தேர்வு எழுதிய 42 பேர்களும் தேர்ச்சி பெற்றனர். 

இதையொட்டி நடந்த பாராட்டு விழாவில், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முன்னாள் கவுன்சிலர் ஜெயராஜ், கவுன்சிலர் ஹேமமாலினி ஆகியோர், கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். இதில் பள்ளியின் தலைமையாசிரியை சீத்தாலட்சுமி, ஆசிரியர்கள் தாமோதரபாண்டியன், சுந்தரராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி