பாலியல் தொல்லை வழக்கு: விவசாயிக்கு கடுங்காவல்

81பார்த்தது
பாலியல் தொல்லை வழக்கு: விவசாயிக்கு கடுங்காவல்
விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை அருகே பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, ஜாதிப்பெயரை கூறி திட்டிய வழக்கில் விவசாயிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வித்து விழுப்புரம் எஸ். சி. , எஸ். டி. சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திண்டிவனம் வட்டம், வடம்பூண்டி, பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த பெரியதம்பி மகன் ஆறுமுகம் (54), விவசாயி. இவா், கடந்த 2022 ஜனவரி 9-ஆம் தேதி 36 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், அந்தப் பெண்ணை ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவாக பேசினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனா். இந்த வழக்கு விழுப்புரம் எஸ். சி, எஸ். டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், ஆறுமுகம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்யஜோதி, ஆறுமுகத்துக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 10ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, நீதிமன்ற போலீஸாா் ஆறுமுகத்தை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தொடர்புடைய செய்தி