விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா மொன்னையன்பேட்டை பகுதியைச் சேர்ந்த தேவகுமரன் (18) என்ற மாணவர், புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்குச் செல்ல புதிய பைக் வாங்கித் தருமாறு தந்தையிடம் கேட்டபோது, அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த தேவகுமரன், தனது வீட்டின் படுக்கையறை ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.