கலைஞர் கனவுஇல்ல திட்ட வீடு கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

434பார்த்தது
திண்டிவனம் தாலுகா தென்நெற்குணம் மறைமலை மாதா நகர் பகுதி பொதுமக்கள், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கூரை வீடுகள் சேதமடைந்ததால், தங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்ற அதிகாரிகள், மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியதை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.