திருவெண்ணெய்நல்லுார்: சாலையோரம் நின்ற விவசாயி மீது கார் மோதி பலி

738பார்த்தது
திருவெண்ணெய்நல்லுார்: சாலையோரம் நின்ற விவசாயி மீது கார் மோதி பலி
திருவெண்ணெய்நல்லுார் அருகே சி.மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா (61) என்பவர், நேற்று முன்தினம் இரவு பல்லரிப்பாளையம் பஜனை கோவில் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்தபோது, திருக்கோவிலுாரில் இருந்து திருவெண்ணெய்நல்லுார் நோக்கிச் சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி