விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், ஜி.எஸ்.டி. ரோடு, உதயா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி மகன் சிலம்பரசன் (வயது 32). நேற்று முன்தினம் மதியம் இவர் மோட்டார் சைக்கிளில் நேரு வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த ஆட்டோ இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதைத் தட்டிக்கேட்ட சிலம்பரசனை ஆட்டோ டிரைவர் திண்டிவனம் சஞ்சீவிராயன் பேட்டையைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன்(29), ஆட்டோவில் வந்த வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சர்தார் மகன்கள் சல்மான்கான் (18), நிசார் (19) ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உள்பட 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.