திண்டிவனம்: ஆற்று மணல் கடத்திய 2 பேர் கைது. லாரி பறிமுதல்

2பார்த்தது
திண்டிவனம்: ஆற்று மணல் கடத்திய 2 பேர் கைது. லாரி பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம், ரோஷனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலை கிராமம் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்த லாரியை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். விசாரணையில், மணல் கடத்தலில் ஈடுபட்ட திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் லாரி உரிமையாளர் ராஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து லாரி மற்றும் இரண்டு யூனிட் மணலைப் பறிமுதல் செய்து, இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி