வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திண்டிவனம் நகராட்சி 33வது வார்டில் உள்ள கர்ணாவூர் ஓடையை நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் நவம்பர் 3 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் நகர மன்ற உறுப்பினர் ஆர். ஆர். எஸ் ரவிச்சந்திரன் உடனிருந்தார். இந்த ஆய்வு, பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.