திண்டிவனம்: தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு சந்தனகாப்பு அலங்காரம்

726பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் இலுப்பத்தோப்பு, ராஜாம்பேட்டை அருள்மிகு பாப்பாத்தி அம்மன் என்கிற ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தேன், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த மூலவருக்கு பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி