திண்டிவனம் விசிக எம்எல்ஏ வன்னியரசு இன்று (மே 22) அமைச்சராக பதவியேற்றார். தற்போது அவருக்கு சமூக நீதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துறையில் அவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன் ஆகியவற்றை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர்
விஜய் தலைமயிலான தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் 2 பேர் உட்பட 23 பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், இன்று இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், விசிக சார்பில் தலா ஒருவர் அமைச்சராகியுள்ளனர்.