வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உட்பட இரண்டு பேர் தற்கொலை

0பார்த்தது
வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உட்பட இரண்டு பேர் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே சூரப்பன்தாங்கல் கிராமத்தில் விவசாயி கமலக்கண்ணன் (45) குடும்பச் சூழல் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வளத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு சம்பவத்தில், பிரம்மதேசத்தைச் சேர்ந்த லட்சுமி (74) நீண்ட நாள் வயிற்று வலியால் அவதிப்பட்டு, அரளி விதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பெரியதச்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி