இருசக்கர வாகனம் மரம் மீது மோதி விபத்து: நண்பர் உயிரிழப்பு.

5பார்த்தது
இருசக்கர வாகனம் மரம் மீது மோதி விபத்து: நண்பர் உயிரிழப்பு.
திண்டிவனம் அருகே ரோஷணை பகுதியைச் சேர்ந்த நண்பர்களான ராஜேஷ் (43) மற்றும் அருள்தாஸ் (34) ஆகியோர் திங்கள்கிழமை புதுச்சேரியிலிருந்து மயிலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். மயிலம் அருகே வாகனம் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அருள்தாஸ் 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மயிலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி