விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஜம்போதி கிராமத்தில் 2023ஆம் ஆண்டு சத்யராஜை அவரது மனைவி சசிகலா மற்றும் கள்ளக்காதலன் ஜானகிராமன் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றனர். காயமடைந்த சத்யராஜ் உயிர் தப்பிய நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டனர். திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக், ஜானகிராமனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15 ஆயிரம் அபராதம் விதித்தார். சசிகலாவுக்கு ஆயுள் தண்டனையுடன், மேலும் 10 ஆண்டு சிறை மற்றும் 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.