திண்டிவனம் அருகே மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

62பார்த்தது
திண்டிவனம் அருகே மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் நேற்று (ஜூன் 8) மாலை 3:00 மணிக்கு, பெரும்பாக்கம் செக்போஸ்ட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் வந்த ஆலகிராமத்தை சேர்ந்த ராஜரத்தினம் (24) புதுச்சேரியிலிருந்து 10 மதுபான பாட்டில்களை கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜரத்தினத்தை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி