ஒலக்கூர்: லாரி விபத்து.. வாலிபர் உயிரிழப்பு

81பார்த்தது
ஒலக்கூர்: லாரி விபத்து.. வாலிபர் உயிரிழப்பு
திண்டிவனம் வட்டம், அய்யந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் அன்புமணி (17). இவர், திண்டிவனம் காவேரிப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அன்புமணி அவ்வப்போது பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் மகன் மணிகண்டனுக்கு (35) சொந்தமான லாரியில் ஜல்லிக்கற்கள் இறக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படிப்படையில், சாரம் கிராமத்தில் தனியார் மனை விற்பனையகம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜல்லிக் கற்கள் இறக்கும் பணிக்கு அன்புமணி சென்றாராம். ஜல்லிக்கற்கள் இறக்கும் பணி தாமதமானதால், சாலையோரத்தில் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். 

இதைக் கவனிக்காத லாரி ஓட்டுநரும், உரிமையாளருமான மணிகண்டன், பின்னோக்கி லாரியை எடுத்து வந்துள்ளார். அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அன்புமணி மீது லாரி ஏறி இறங்கியது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ஒலக்கூர் போலீசார் நிகழ்விடம் விரைந்து, அன்புமணியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மணிகண்டன் மீது ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி