திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்ணைலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அப்பாஸ் (42), தனியார் நிதி நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 9 லட்சம் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், அவரது பொக்லைன் இயந்திரத்தை எடுக்க வந்த ஊழியர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. தான் வாங்கிய கடனை விட ரூ. 10 லட்சம் கட்டிவிட்டதாகவும், அதற்கான ரசீது கேட்டதாகவும் அப்பாஸ் கூறியுள்ளார். பிரச்சனை முற்றிய நிலையில், மனமுடைந்த அப்பாஸ் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உறவினர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.