கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காப்பக்காடு அருகே 1 கிலோ கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்ய முயன்ற வழக்கில் மழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (24) கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் ஆணையின்படி, விக்னேஷ் மீது குண்டர் சட்டம் அமல்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.