உச்சநீதிமன்றதீர்ப்பு கூட்டாட்சிக்கானவரலாற்று வெற்றி–பொன்முடி

0பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, உச்சநீதிமன்ற தீர்ப்பு கூட்டாட்சி தத்துவத்திற்கும் தமிழக அரசிற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என தெரிவித்தார். இந்த தீர்ப்பு ஆளுநரின் அதிகார வரம்பை தெளிவுபடுத்தியிருப்பதாகவும், இது பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை கட்டுப்படுத்தும் ஒன்றிய அரசின் முயற்சிக்குக் கிடைத்த பெரிய அடி எனவும் அவர் கூறினார். மேலும், பிரதமர் வருகையின் போது கோயம்புத்தூர் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டதையும் மத்திய அரசின் நடத்தை தகாதது எனவும் அவர் கண்டித்தார்.

தொடர்புடைய செய்தி