திருக்கோவிலூர்: கமிட்டி பாதுகாப்பு கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

74பார்த்தது
திருக்கோவிலூர்: கமிட்டி பாதுகாப்பு கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில், ரூ. 2 கோடியில் பாதுகாப்புக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் குழு செயலாளர் சந்துரு, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சக்கரை முன்னிலை வகித்தனர். பொன்முடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பேசினார். நகராட்சி தலைவர் முருகன், பேரூராட்சி தலைவர் அன்பு, ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமி உமேஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவிச்சந்திரன், லூயிஸ், பிரபு, சிறுபான்மையினர் பிரிவு அக்பர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேளாண் துணை இயக்குனர் சுமதி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி