கோவிலுக்குள் பெண்களுக்கு தடை வாயில் முன்பு அமர்ந்து வழிபாடு

1பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோயிலில், உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் நடத்தவிருந்த திருவிளக்கு மற்றும் சுமங்கலி பூஜைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோவில் கதவு திறக்கப்படாத நிலையில், பெண்கள் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே வாசலில் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் தனிநபர் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கியதை அடுத்து கோவில் திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி