
வானூர்: காதலியை தாக்கிய வாலிபர் கைது
புதுச்சேரியைச் சேர்ந்த ஆரோக்கியநாதன் (24) என்பவர், 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்த பெண்ணை, கடந்த 4 மாதங்களாகப் பேச மறுத்ததால், வானுார் அருகே வாழப்பட்டாம்பாளையம் சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளார். இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து ஆரோக்கியநாதனை கைது செய்தனர்.








































