புதுச்சேரியைச் சேர்ந்த 22 வயது கதிர், திருமணமான பெண்ணுடனான உறவை கைவிடாததால் கண்டமங்கலம் சுந்திக்குளம் பகுதியில் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கண்டமங்கலம் போலீசார் கதிரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி, கொலை தொடர்பாக புதுச்சேரியைச் சேர்ந்த ஞானசேகர் (30), கோகுல் (22), ஞானவேல் (18) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.