விழுப்புரம் மாவட்டம், சின்னக்கோட்டக்குப்பம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய மணிகண்டன், குப்புசாமி, முத்துவேல் உள்ளிட்ட 8 பேரை கோட்டக்குப்பம் போலீசார் புதன்கிழமை கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் ரோந்து சென்ற போலீசார், ஒதுக்குப்புறமான இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். கைதானவர்களிடமிருந்து 16,500 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.