சேலம் வாழப்பாடி அருகே தன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு பேசிய பாமக சேலம் மேற்கு எம்.எல்.ஏ அருள், இந்த தாக்குதல் திட்டமிட்ட கொலை முயற்சி என்றும், அன்புமணி ராமதாஸ் தன்னை கொல்லும் நோக்கில் ஆட்களை ஏவி விட்டதாகவும் குற்றம் சாட்டினார். அவரை முதல் குற்றவாளியாக சேர்த்து கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், சேலத்தில் டெக்ஸ்டைல் பார்க்காக ஒதுக்கப்பட்ட இடம் தற்போது கலரிங் பார்க் என மாற்றப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்றும், இதற்கெதிராக போராட்டம் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தன் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கும் தன்னிடமிருந்தும் ஒரே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அன்புமணியைப் பற்றிய எல்லா தகவல்களையும் வெளிப்படுத்துவேன் என்றும் அவர் கூறினார்.