விழுப்புரம்: பிரபல ரவுடியின் தலையில் கல்லை போட்டு கொலை முயற்சி

551பார்த்தது
விழுப்புரம்: பிரபல ரவுடியின் தலையில் கல்லை போட்டு கொலை முயற்சி
விழுப்புரம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பிரபல ரவுடி மெண்டல் கதிர் (எ) கதிரவன் (40) மீது, மேல்தெரு டீக்கடையில் மேகநாதன் (44), அன்பு (40) ஆகியோர் கண்ணாடி கிளாசால் தாக்கி, பின்னர் மேகநாதன் கிரைண்டர் குழவி கல்லால் தலையில் அடித்து கொலை செய்ய முயன்றார். படுகாயமடைந்த கதிர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி