விழுப்புரம்: கொலை முயற்சி; வாலிபருக்கு குண்டாஸ்

81பார்த்தது
விழுப்புரம்: கொலை முயற்சி; வாலிபருக்கு குண்டாஸ்
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், நாவற்குளம், வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ரகு (எ) மாரியப்பன் (36). இவர் மீது கடந்த மாதம் 14-ஆம் தேதி ஆரோவில் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில், விழுப்புரம் எஸ்.பி. சரவணன் பரிந்துரைப்படி, ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய மாரியப்பனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை ஆரோவில் போலீசார் குண்டர் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி