விழுப்புரம் அருகே அரை கிலோ கஞ்சா பறிமுதல் – இளைஞர் கைது

525பார்த்தது
விழுப்புரம் அருகே அரை கிலோ கஞ்சா பறிமுதல் – இளைஞர் கைது
விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் பகுதியில் அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்செல்வன் (20) என்ற இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில், தமிழ்செல்வன் மற்றும் ஒரு 17 வயது சிறுவன் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து சுமார் 500 கிராம் கஞ்சா, எடை இயந்திரம், செல்போன் மற்றும் ரூ. 8000 பணம் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட தமிழ்செல்வன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

தொடர்புடைய செய்தி