விழுப்புரம் அருகே காங்கிரஸ் சொத்துக்கள் குறித்து ஆய்வு

65பார்த்தது
விழுப்புரம் அருகே காங்கிரஸ் சொத்துக்கள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சொத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்பு குழு தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு தலைமையிலான குழுவினர், நேற்று காலை விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கண்டமங்கலம், வளவனூர், விழுப்புரம், மருதுவார், ஆஞ்சநேயர்கோவில்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான பாரம்பரிய இடங்கள், பழைய அலுவலகக் கட்டிடங்கள் போன்றவற்றை குழுவினர் நேரில் பார்வையிட்டு, அதன் தற்போதைய நிலை குறித்து விசாரித்தனர்.

தொடர்புடைய செய்தி