மாஜி அமைச்சரின் பேச்சால் பழனிச்சாமி தோற்பார் லியோனி பேச்சு

1பார்த்தது
மாஜி அமைச்சரின் பேச்சால் பழனிச்சாமி தோற்பார் லியோனி பேச்சு
விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கவுதம் திராவிடமணியை ஆதரித்து கிளியனூர், வானூர் பகுதிகளில் தலைமை கழகப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி பிரசாரம் மேற்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்திய விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்களால் ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என்றும், வானூர் வேட்பாளரை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் மக்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும், அமைச்சர் சி. வி. சண்முகத்தின் பேச்சுகளே பழனிசாமி தோல்விக்குக் காரணம் எனப் பேசினார்.

தொடர்புடைய செய்தி