கோட்டகுப்பம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

70பார்த்தது
கோட்டகுப்பம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது
விழுப்புரம் மாவட்டம், சின்னகோட்டக்குப்பம் பகுதியில் ஆன்லைன் மூலமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, சின்னகோட்டக்குப்பம் வண்ணாரத் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார், 37; என்பவரை பிடித்து சோதனை செய்த போது, மொபைல் போன் மூலம் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், ஆன்லைன் லாட்டரிக்குப் பயன்படுத்திய இரு மொபைல் போன்கள், ஒரு புல்சர் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Job Suitcase

Jobs near you