சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சாலை மறியல். கைது.

440பார்த்தது
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில், மாநில ஒருங்கிணைப்பாளர் மணி கண்ணன் தலைமையில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், நிலுவை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி பணியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 16வது நாளாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், திடீரென விழுப்புரம்-சென்னை சாலையில் மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி