விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் வருத்தமளிப்பதாகவும், இது போன்ற சம்பவங்கள் பெண்கள் காவல்துறையிடம் நம்பிக்கையை இழக்கச் செய்கின்றன என்றும் பாட்டாளி மக்கள் கட்சி செயல் தலைவர் ப.ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடும் காவலர்களை உடனடியாக பணி நீக்கம் செய்து, மீண்டும் பணியில் சேர்க்கக்கூடாது என்றும், இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க துறை ரீதியாகப் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பெண்கள், மாணவிகள் மீதான நம்பிக்கையைத் தக்க வைத்து கொள்ள தமிழக காவல்துறை மற்றும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.