வானூரில் பத்திர பதிவுத்துறை சார்பில் சிறப்பு முகாம்

83பார்த்தது
வானூரில் பத்திர பதிவுத்துறை சார்பில் சிறப்பு முகாம்
வானுார் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து தரப்பட்ட ஆவணங்களில் முத்திரை தீர்வு இழப்பு வசூல் செய்யும் முகாம் நடந்தது. முத்திரைத் தீர்வை தனித்துணை ஆட்சியர் தனலட்சுமி தலைமை தாங்கி ஆவணதாரர்களிடமிருந்து இழப்புத் தொகையை வசூலித்தார். 

திண்டிவனம் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) கல்பனா, பதிவாளர் (தணிக்கை) ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். திண்டிவனம் மாவட்ட அமைச்சுப் பணியாளர் சங்கத் தலைவர் சடகோபன், வானுார் சார் பதிவாளர் (பொறுப்பு) சந்திரமோகன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். முகாமில் 55 ஆவணதாரர்களிடமிருந்து இழப்பு தொகை வசூலிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி