விக்கிரவாண்டி: ஊஞ்சலாடிய போது கழுத்தில் கயிறு இறுகி மாணவன் பலி

264பார்த்தது
விக்கிரவாண்டி: ஊஞ்சலாடிய போது கழுத்தில் கயிறு இறுகி மாணவன் பலி
விக்கிரவாண்டி அருகே கொட்டியாம்பூண்டி கிராமத்தில், வேல்முருகனின் மகன் வெற்றி குணவேல் (11) அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன், வீட்டின் முன்பு மரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது எதிர்பாராத விதமாக ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த விக்கிரவாண்டி காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி