விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே பேராவூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் அர்ஜுனன் (44), தந்தையின் இறுதிச் சடங்கிற்காக விடுமுறையில் சொந்த ஊர் வந்த நிலையில், தந்தையின் மறைவால் மனமுடைந்து காணப்பட்டார். அதிகாலை வீட்டில் மயங்கி விழுந்த அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையின் இறுதிச் சடங்கிற்கு வந்த ராணுவ வீரரின் திடீர் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.