வானூர்: லாட்டரி சீட்டு விற்பனை செய்த மூன்று பேர் கைது

77பார்த்தது
வானூர்: லாட்டரி சீட்டு விற்பனை செய்த மூன்று பேர் கைது
வானுார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார் சென்றது. வானுார் போலீசார் ஆகாசம்பட்டு பகுதியில் நேற்று ரோந்து சென்றபோது, மொபைல்போன் மூலமாக 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த மூவரை கைது செய்தனர். 

வானுார் அடுத்த பாப்பாஞ்சாவடி புதுகாலனி ராசு மகன் கோவிந்தன், 37; விநாயகபுரம் அருணாசலம் மகன் சுரேஷ் தர்மா, 32; புதுச்சேரி தொண்டமாநாதம் காத்தவராயன் மகன் பார்த்தசாரதி, 37; என்பது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து, லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி